விசித்ராவிற்கு பதில் வேறு ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்ப சொன்ன பிரதீப் – சூடான விசித்திரா

0
557
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தற்போது 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.

- Advertisement -

முதல் நாளில் வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். நேற்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் முதல் நாளில் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் விவாதம் தொடங்கிவிட்டது.அந்த வகையில் காலையில் ஜோவிதாவிற்கு சீனியர் நடிகர்கள் பலருமே படிப்பை பற்றி அறிவுரை செய்திருந்தார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஜோவிதா அமைதியாக இருந்தார்.

அதற்குப்பின் இந்த வார கேப்டனான விஜய் வர்மா தன்னிடம் சரியாக விவாதியாக்காத 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேட் செய்தனர்.

-விளம்பரம்-

இந்த முதல் வார நாமினேஷனில் அனன்யா, ஐஷு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப், யுகேந்திரன் ஆகிய 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். பொதுவாக பிக் பாஸ் என்றாலே முதல் வாரத்தில் வயதானவர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுவார்கள். இதனால் இந்த வாரம் கண்டிப்பாக பவா செல்லதுரை தான் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வந்த முதல் நாளே அவரது நடவடிக்கைகள் ரசிகர்களை கொஞ்சம் கவர்ந்திருப்பதால் அவர் இந்த வாரம் தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் இருவரும் ரூசை மீறிவிட்டதாக அவர்களையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லுமாறு பிக் பாஸ் கூறியிருந்தார் உடனே பிரதீப் இவர்கள் இருவருக்கு பதிலாக ஸ்மால் பாய்ஸ் வீட்டில் இருந்து வேறு இதுவரை அனுப்புங்கள் என்று கூற விசித்ரா எங்கள் இருவருக்கும் இணையாக வேறு யாராவது இருக்கிறார்களா என்று பிரதீப் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்

Advertisement