பலரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

0
738
biggboss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் முன்னோடி நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த “பிக் பிரதர்” என்ற நிகழ்ச்சி தான். இந்தியாவில் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமாகியது.

-விளம்பரம்-

பின்னர் ஹிந்தி பிக் பாஸின் மூன்றவது சீசனில் இருந்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் தொகுப்பாளராக நிகழ்ச்சியை நடத்தினார். இதனால் இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது. இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஹாட்ஸ்டாரில் கடந்த வருடம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் ஒளிபரப்பி இருந்தது. இதை முதலில் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். பின் சில காரணங்களால் அவர் விலகி சிம்பு இந்த நிகழ்ச்சியை வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 6:

அதற்கு பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது, எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்குவார்கள்.

பிக் பாஸ் சீசன் 7 அப்டேட்:

ஆனால், கொரோனா கட்டத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியை அக்டோபர் தொடங்கி ஜனவரியில் முடிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் துவங்க இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

Advertisement