சாப்பாட்டுக்காக எத்தனை வாட்டி சார் கேக்குறது – விஜய் சேதுபதியிடம் கண்ணீர் வடித்த சாச்சனா

0
183
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 13ம் நாளுக்கான இரண்டாம் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 13ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். நேற்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருந்தார். அதில் யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும்.

நேற்று எபிசொட்:

எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். இதை அடுத்து குவிஸ் டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றார்கள். அதற்கு பிறகு டம்ளரை அடுக்க பந்தால் தடுக்க வேண்டும் டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றி பெற்றார்கள். கடைசி ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே டாஸ்க்கில் 15 பொருளைகளை அதே ஆர்டரில் அடுக்க வேண்டும். அதில் ஆண்கள் அணியில் 24 புள்ளிகள் பெற்றார்கள். பெண்கள் அணியில் 25 புள்ளிகள் பெற்று இந்த டாஸ்க்கை வென்றார்கள்.

-விளம்பரம்-

முதல் ப்ரோமோ:

பின் பெண்கள் அணியில் ஒரு நபரை நாமினேஷனில் இருந்து காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் அணியில் ஜாக்குலின், சாச்சனா, சௌந்தர்யா தர்சா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். அதில் ஜாக்லின் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் வெளியான முதல் ப்ரோமோவில், முதல் வாரம் என்னடா இப்படி விளையாடுறாங்க என்று தோணுச்சு. என்ன, ஏது என்று கூப்பிட்டு விசாரித்தோம். ஆனா இப்போ என்னடா இப்படி எல்லாம் விளையாடுறாங்க அப்படின்னு இருக்கு. இப்பதான் கொஞ்சம் விளையாட ஆரம்பிச்சிருக்காங்க.

இரண்டாம் ப்ரோமோ:

ஆனா அவங்க இன்னும் நிறைய விளையாடனும். இன்று இரவு அவர்களை கூப்பிட்டு என்ன ஏதுன்னு அன்பா விசாரிப்போம் என்று விஜய் சேதுபதி கூறுகிறார். தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், அன்ஷிதா மற்றும் சாச்சனா இடையே நடந்த சாப்பாட்டு பிரச்சினை குறித்து விஜய் சேதுபதி சச்சனாவிடம் கேட்கிறார். அதற்கு அவர், நான் ரெண்டு தடவை கேட்டு விட்டேன் சார். மூணாவது தடவை கேக்குறதுக்கு அசிங்கமாக இருந்தது என்று சாச்சனா அழுகிறார்

Advertisement