விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி 2ம் நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருக்கிறது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. இதில் வியானா - 3 ,ஆதிரை - 3 , அப்சரா - 3 , பிரவீன் ராஜ் - 3 , பிரவீன் காந்தி - 4 , திவாகர் - 7, கலையரசன் - 12 ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் கானா பாடகராக கலந்து கொண்டு இருப்பவர் வினோத்.
பிக் பாஸ் 9:
அதோடு இந்த முறை நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களின் எண்ணிக்கையை குறைத்து சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்களை தான் உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். அந்த வகையில் கானா மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமாகி இருப்பவர் வினோத். இவர் வடசென்னையின் சர்மா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் சர்பட்டா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற சில படங்களில் பாடிய பின்னணி பாடகர் முத்து வினோத்தின் தம்பிகளில் ஒருவர். இவருடைய மனைவி பாக்கியா. இவர் பியூட்டி பார்லர் வைத்திருக்கிறார். இவருக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள்.

கானா வினோத்:
தற்போது இவர் பல கனவுகளோடு பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார். இந்நிலையில் கானா வினோத் பற்றி அவருக்கு நெருங்கிய வட்டாரம் அளித்த பேட்டியில், அண்ணனுக்கு பூர்வீகம் ராயபுரம். கானா தான் முழுநேர வேலை. எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்தது இரண்டு விஷயம்தான். முதலில் காசு கொட்டிக் கொடுத்தாலும் கஞ்சா, ரவுடிசம் போன்ற விஷயங்களை ஆதரித்து பாட மாட்டார். இப்ப கானாவில் சிலர் இதையெல்லாம் என்கரேஜ் செய்வதால் இந்த இடத்தில் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஆனால், அண்ணா அதை பண்ணவே மாட்டார். அதை அவர் ஒரு பாலிசியாகவே வைத்திருக்கிறார்.

கானா வினோத் பற்றிய தகவல்:
இரண்டாவது விஷயம், சம்பாதித்த பணத்தில் தான் உதவின்னு கேட்டு வர ஏரியா மக்களுக்கு முடிந்ததை செய்வார். கானாவில் ஐந்து நிமிடத்தில் கூட பாட்டை உருவாக்கி இருக்கிறார். அதேபோல் சமூக விழிப்புணர்வை கானாவில் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் தருவார். 'வாலிபர் கானா' இவருடைய ஆல்பங்களில் முக்கியமான ஒன்று. இவர் சினிமாவிலும் பாடியிருக்கிறார். சாண்டி மாஸ்டர் அண்ணாவுடைய நண்பர்தான். அதனால் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் வேலை செய்திருக்கிறார். இப்ப பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போயிருக்கிறார். எப்படி ஆடுகிறார் என்று பார்க்க நான் மட்டும் இல்லை எங்க ஏரியா மக்களுமே காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.






