விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 55 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார். இந்த எட்டாவது வாரத்தில் fj கேப்டன் ஆகி இருக்கிறார். எட்டாவது வாரத்தில் நடந்த நாமினேஷனில் சாண்ட்ரா, ப்ரஜன், திவ்யா, கனி, கம்ருதீன், விக்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா,பார்வதி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் வீடு ஸ்கூலாக மாறி இருக்கிறது. ப்ரஜன் பிரன்சிபல், கனி மற்றும் அமித் ஆசிரியர்களாகவும், பார்வதி மற்றும் fj வார்டன்களாகவும் இருக்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் மாணவ, மாணவிகளாக பங்கேற்று இருக்கிறார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பெரிதாக கலவரம் இல்லாமல் நிகழ்ச்சி நன்றாகவே சென்றது.

வெளியேறும் நபர்:
இப்படி இருக்கும் நிலையில் எட்டாவது வாரத்தில் வெளியேற இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் டபுள் எவிஷன் என்று கூறப்படுகிறது. தற்போது வெளியாகிருக்கும் நிலவரத்தின்படி கனி முதலில் வெளியேற இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாவதாக வியானா வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. இதில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.






