விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்கி 5ம் நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் 9:
மேலும், நாளை முதல் வார எவிக்சன் கான ஷூட் நடைபெற இருக்கிறது. சில சீசனங்களில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்று எவிக்ஷன் நடைபெறாது என்று கூறி இருந்தார்கள். அந்த வகையில் இந்த வாரம் முதல் எவிக்ஷன் இருக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். அதற்குள்ளே சோசியல் மீடியாவில் வெளியேறப் போகும் போட்டியாளர்களுடைய பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள்.

எவிக்ஷன் பற்றிய தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே அதிரடியாக நடந்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி இன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே நந்தினி அப்செட்டில் தான் இருக்கிறார். நந்தினி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

நந்தினி வெளியேற்றம்:
இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே தனிமையாகவும் இருந்திருக்கிறார். இவருக்கு மற்ற போட்டியாளர்களும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும், இவர் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மற்ற போட்டியாளர்களுடன் மிங்கில் ஆகாமல் தனியாக தான் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நந்தினி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இந்த தகவலை கூடிய விரைவிலேயே பிக் பாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






