ரசிகரின் செல் போனை அஜித் புடிங்கியது பற்றி கேட்ட நிருபர் – ஆரி கொடுத்த நச் பதில் (மனுஷன் வேற ரகம்)

0
6623
ajith

வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்களின் செல்போனை அஜித் பிடுங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்றுமுடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர்.அப்போது செல்போனில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை புடிங்கி வைத்துக்கொண்டார்.

- Advertisement -

பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபரை அழைத்து மாஸ்க் போட சொல்லி செல் போனை திருப்பிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் வாக்களித்து சென்ற பின்னர் அங்கு இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு சென்றார் அஜித். இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளானது. இதுகுறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்த நிலையில் சமீபத்தில் ஆரி இதுகுறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆரியிடம், இதுகுறித்து கேட்கப்பட்ட போது, அஜித் அந்த ரசிகருடன் சாரி கேட்டுவிட்டு செல்போனை திருப்பிக் கொடுத்த அந்த பண்பையும் நீங்கள் பார்க்கவேண்டும் பிரபலங்கள் வெளியில் வரும்போது ரசிகர்கள் அதிக அன்பினால் இதுபோன்று செய்து விடுகிறார்கள் ஆனால் தேர்தல் மாதிரியான நேரத்தில் தலையைநாம் பாராட்ட வேண்டும். அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே அந்த நபரை அழைத்து போனை கொடுத்ததையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஆரி.

-விளம்பரம்-
Advertisement