விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. ஆரி மீது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் முன்வைத்த குறை என்னவென்றால் அவர் எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருக்கிறார் என்பது தான். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருக்கும் நடிகை நயன்தாரா விற்கு நடிகர் ஆரி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : சென்னை வந்து ஏமாற்றம். 10 வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனை சந்தித்த பின் நடந்த அற்புதம் – அஸ்வின் சொன்ன சூப்பர் ஸ்டோரி.

Advertisement

இதனை நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஐஸ்வர்யா தத்தா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ஆரிவுடன் ‘அலேகா’ படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ஆரி பற்றி மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இருந்திருக்கிறது ஆனால் போட்டியாளர்களுக்கு தான் அவரைப் பற்றி புரியவில்லை அவர் நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்திருந்தார் மேலும் நயன்தாராவுடன் நடித்தபோதே அவருக்கும் இயக்குனருக்கும் ஆரி தன்னுடைய அறிவுரையை வழங்குவார் எனவே அவர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம் என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா கூறியதற்கு ஆதாரமாக நடிகை நயன்தாரா உடன் நடித்த அனுபவம் குறித்து 6ஏ பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அதில் பேசிய அவர் நயன்தாரா மிகவும் தொழில் பக்தியுடன் இருப்பார் வேலை நேரத்தில் சரியாக அவருடைய வேலையை செய்வார் ஒரு விஷயத்தை இவ்வாறு செய்யலாம் என்று நம்முடைய கருத்தை சொன்னார் அதையும் கூட அவர் ஏற்றுக் கொள்வார் நடிப்பைத் தாண்டி மற்ற நேரத்தில் கூட அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று தான் இருப்பார் நீங்கள் பேசினால் பேசுவார்கள் ஒரு பெரிய நடிகை என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் அவர் மிகவும் இனிமையாக இருப்பார் என்று கூறியுள்ளார்

Advertisement
Advertisement