சென்னை வந்து ஏமாற்றம். 10 வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனை சந்தித்த போது நடந்த அற்புதம் – அஸ்வின் சொன்ன சூப்பர் ஸ்டோரி.

0
1495
aswin

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்துவும், தீபாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அஸ்வின் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இரட்டை வால் குருவி சீரியலில் நடித்தவர்.ஆனால் இவர் தொலைக்காட்சியில் மட்டுமல்ல படத்திலும் நடித்துள்ளார் அஸ்வின். தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் ரீமேக் செய்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் துருவ்வின் அண்ணனக நடித்திருந்தார் அஸ்வின். இப்படி ஒரு நிலையில் இன்று (ஜனவரி 10) குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

அப்போது அஸ்வின் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய போது, 2011 ஆம் ஆண்டு ஆண்டு நான் வீட்டை விட்டு வந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அப்போது ஒருவரை நம்பி நான் ஏமாந்து அமர்ந்த போது நான் சந்தித்த முதல் பிரபலம் நீங்கள் தான். உங்களிடம் நான் சினிமாவில் நுழைய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது ட்விட்டரில் அணைத்து இயக்குனர்களையும் பின் தொடர்ந்து அதன் மூலமாக அவரை அணுகுங்கள் என்று சொன்னீர்கள். அந்த பயணம் தான் என்னை இங்கே கொண்டு வந்துள்ளது என்று கூறினார் அஸ்வின். மேலும், சிவகார்த்திகேயனை முதன் முதலில் சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின்.

-விளம்பரம்-
Advertisement