ரியோவிற்கு 50 ஓட்டையும் போட்டுவிட்டு ஆரி குறித்து சஞ்சீவ் போட்ட பதிவ பாருங்க.

0
15045
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் ரியோ, கேப்ரில்லா, நிஷா, ரம்யா, ரேகா, ஆஜீத், ஷிவானி என்று பல்வேறு விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் (ரம்யா, ரேகா இருவரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி reference பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).

- Advertisement -

இதனால் விஜய் டிவி பிரபலங்களை மட்டும் தொடர்ந்து காப்பற்றி வருவதாக ரசிகர்கள் பலரும் குறை கூறி வந்தனர். அதிலும் ரியோ வெற்றி பெற வேண்டும் என்று பல விஜய் டிவி பிரபலங்களும் விருப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரமே ரியோவை இந்த வாரம் காப்பற்றி இறுதி போட்டிக்கு அனுப்ப வேண்டும்என்று விஜய் டிவி பிரபலங்கள் சமூக வலைதளத்தில் மறைமுக பிரச்சாரத்தைதுவங்கி இருந்தனர். இந்த வாரம் விஜய் டிவி சிரியல்களில் நடித்து வரும் சஞ்சீவ், ஆல்யா மானஸா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன், ஸ்ரீதேவி அசோக் என்று பலரும் ரியோவிற்கு ஹாட் ஸ்டாரில் 50 ஓட்டுக்களை போட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சஞ்சீவ், ஆரியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, நீ கலக்கு மாமா என்று பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் ரியோவிற்கு சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா தங்களது 50 வாக்குகளையும் அளித்துவிட்டதாக தங்களது சமூக வலைதளத்தில் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்ட நிலையில் தற்போது ஆரி பற்றி சஞ்சீவ் இப்படி போட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement