நான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.

0
691
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

வீடியோவில் 5 : 15 நிமிடத்தில் பார்க்கவும்

இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரி எந்த ஒரு பேட்டியிலும் பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஆரி தனக்கு மூன்று சீசன்களாக பிக் பாஸில் இருந்து அழைப்பு வந்ததாகவும், ஆனால் இந்த சீசனில் தான் நான் கலந்துகொள்ள முடிவெடுத்தேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், எனக்கு மூன்று சீசன்களாக அழைப்புகள் வந்தது. ஜல்லிக்கட்டு முடிந்த பின்னர் முதல் சீசன் போது எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், எனக்கு இந்த நிகழ்ச்சியை பற்றி எந்த ஒரு ஐடியாவும் அப்போது இல்லை.

இயக்குனர் தாமிரா

அதனால் முதல் சீசனில் கலந்துகொள்ளவில்லை அதே போல இரண்டாம் சீசன் போது எனக்கு திருமணம் ஆகிவிட்ட்டதால் செல்ல இயலவில்லை. அதே போல மூன்றாம் சீசன் போது என் மகள் குழந்தை என்பதால் செல்லவில்லை. ஆனால், நான்காம் சீசனில் நான் பங்குபெற முக்கிய காரணமே இயக்குனர் தாமிரா தான். அவர் தான் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவறால் தான் நான் இந்த சீசனில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement