"நாங்கள் பண்ண வேண்டிய படத்தை மோடி தடுத்துவிட்டார்" - மேடையில் நடிகர் ஆரி பேச்சு. வீடியோ இதோ.

By Ajju · 7/4/2022

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஆரி, மோடியால் தான் நடிக்க இருந்த படம் நின்றுவிட்டது என்று பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஆரி அர்ஜுனாவும் ஒருவர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பின் ஆரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரும் ஆரியே ஆவார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் சேர்ந்து உள்ளது. நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.

இதையும் பாருங்க : சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் - தடியடி நடத்தி கைது செய்த போலீசார். பின்னணி என்ன ? வீடியோ இதோ.

ஆரியும் சமூக சேவைகளும் :

நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் பல்வேரு உதவிகளை செய்து வருகிறார் ஆரி.

https://www.youtube.com/watch?v=uKPPdQkVivY

ஆரியின் பகவான் :

இறுதியாக நடிகர் ஆரி, நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்து இருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பின் ஆரியின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே பகவான் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த படமும் இன்னும் படப்பிடிப்பில் தான் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் ஆரி 'சிட்தி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று இருந்தார்.

சிட்தி பட பத்திரிகையாளர் சந்திப்பு :

சூர்யா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்தி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் ஆரி, ராஜன் அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது.

மோடியால் நின்ற படம் :

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்,  ஒரு நலிந்த தயாரிப்பாளரைக் காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்குநரும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது ஆனால் அதை தடுத்தது மோடிதான், டிமானிடைசேசன் வந்தது படத்தை பாதித்து விட்டது என்று பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full