சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் – தடியடி நடத்தி கைது செய்த போலீசார். பின்னணி என்ன ? வீடியோ இதோ.

0
241
Beast
- Advertisement -

சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதையும் பாருங்க : காவலன், சுந்தர பாண்டியன் படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆகிடுச்சா ? அவருக்கு இவ்ளோ பெரிய மகளா.

- Advertisement -

விரைவில் வெளியாக இருக்கும் பீஸ்ட் :

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

பீஸ்ட் படத்தின் கதை :

இந்த பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்து வைத்து இருக்கும் தீவிர வாதிகளை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்கள் சாலை மறியல் :

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக முன்பதிவு பல திரையரங்குகளில் துவங்கிவிட்டது. அதே போல டிக்கெட் முன் பதிவு துவங்கிய சில மணி நேரத்திலேயே விற்று தீர்த்துவிட்டது. இது ஒருபுறம் இருக்க ரசிகர் ஷோக்களை பார்க்க விஜய் ரசிகர்கள் பலரும் ஆயிர கணக்கில் பணம் கொடுத்து வாங்க திரையரங்கிற்க்கு முன் குவிந்து வருகின்றனர்.

போலீசார் தடியடி :

இந்நிலையில், கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில், பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி மறுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதையும் மீறி ரசிகர்கள் சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தததால், அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Advertisement