அஜித்தின் அரசியல் திட்டங்கள் – யாரும் அறியாத விஷயத்தை அப்போதே சொல்லியுள்ள ஆரி. வைரல் வீடியோ.

0
769
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு தற்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளார். அந்த போல இந்த சீசன் வின்னர் ஆரி தான் என்று ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். அதே போல ஆரி பற்றிய பல்வேறு அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளையும் ஆரியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஆரி, நடிகர் அஜித் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

aari

அந்த மேடையில் பேசியுள்ள ஆரி, தல அஜித் ஒருவர் தான் அரசியலை பற்றி சினிமாவின் பேசாமல் இருக்கிறார். ஆனால் தமிழக அரசியல் குறித்து பல விதமான நல்ல திட்டங்களை போட்டு வைத்துள்ளார் தல அஜித் ” என்று கூறியுள்ளார். நடிகர் அஜித் தான் அரசியலுக்கு நிச்சயம் வரமாட்டேன் என்றும் தவறாமல் வாக்களிப்பது மட்டும் தான் என்னுடைய அதிகபட்ச அரசியல் பொறுப்பு என்று எப்போதோ கூறிவிட்டார். இருப்பினும் சத்தமில்லாமல் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement