பல ஆண்டுகள் கூட நடித்த கோவை சரளாவிற்கே வடிவேலு செய்துள்ள துரோகம் - உண்மையை சொன்ன ஆர்த்தி.

By subhashini · 16/2/2024

நடிகர் வடிவேலுவின் உண்மை முகத்தை பிக் பாஸ் ஆர்த்தி வெளிச்சம் போட்டு காட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் ஆர்த்தி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நகைச்சுவையாளர் என பன்முகம் கொண்டு இருப்பவர்.

இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ணக்கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை ஆர்த்தி அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகரான கணேஷை காதலித்து வந்தார். பின் ஆர்த்தி, கணேஷ்ஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆர்த்தி குறித்த தகவல்:

திருமணத்திற்கு பிறகும் இவர் பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்த்தி கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார் ஆர்த்தி. இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி.

https://www.youtube.com/shorts/PIiEw9gnUkE

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆர்த்தி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இருப்பினும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும், இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே இவர் சின்னத்திரை, படங்களிலும் பெரிதாக இவரை காண முடியவில்லை.

ஆர்த்தி பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் ஆர்த்தி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் வடிவேலு குறித்து கூறியிருந்தது, ஒரு படத்தில் நடிக்கும் போது வடிவேலு என்னை அழைத்து, நீ நல்ல நடிக்கிறாய் என்று பாராட்டி இருந்தார். ஆனால், உண்மையில் வடிவேலு அப்படி அழைத்து பாராட்டி விட்டால் அந்த படத்தில் அவர்களுக்கு காட்சி இருக்காது. தன்னைவிட யாரும் நல்லா நடிக்க கூடாது என்று நினைப்பவர் தான் வடிவேலு. அதேபோல் அவர் நடிக்கும் படங்களில் தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பட வாய்ப்பு கொடுப்பார்.

வடிவேலு குறித்த விமர்சனம்:

24 ம் புலிகேசி படத்தில் கோவை சரளாவையும், என்னையும் இயக்குனர் சிம்பு தேவன் கமிட் செய்திருந்தார். ஆனால், வடிவேலு அவங்க எல்லாம் பார்த்த முகங்கள். அதனால் இந்த படத்தில் அவர்கள் நடிக்க வேண்டாம் என்று கூறி எங்களை வெளியேற்றி விட்டார்கள். வடிவேலு ஒரு பாம்பு மாதிரி என்று என்று வறுத்தெடுத்து கிழித்தெறிந்து இருந்தார் ஆர்த்தி. ஆர்த்தி மட்டும் இல்லாமல் சமீபகாலமாகவே வடிவேலை குறித்து அவருடன் நடித்த சக நடிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது எதற்கும் வடிவேல் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. சமீபத்தில் கூட கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு வடிவேலு வராதது குறித்து பலருமே கண்டித்து வடிவேலுவை திட்டி இருந்தார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full