அட, சிறுவதிலேயே தனது கணவருடன் இணைந்து நடித்துள்ள ஆர்த்தி. அவரே பகிர்ந்த புகைப்படம்.

0
5507
aarthi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் ஆர்த்தி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நகைச்சுவையாளர், நடன கலைஞர் போன்ற பன்முகங்கள் கொண்டவர். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ணக்கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஆர்த்தி அவர்கள் ஒரு ஆணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகை ஆர்த்தி அவர்கள் ஏற்கனவே தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகரான கணேஷ்கரை காதலித்து வந்தார்.பின் ஆர்த்தி, கணேஷ்ஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் தற்போது வரை இவர்கள் இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்த்தி கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி புகைப்படங்களை பகிர்வது வழக்கம். மேலும், ஆர்த்தியை போலவே கணேஷ்கரும் சிறுவதிலேயே பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆனால், கணேஷ்கரும் ஆர்த்தியும் சிறு வயதிலேயே ஒன்றாக நடித்துள்ளனர். அந்த புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement