இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு விஷயம். ஆர்த்திக்கு குவியும் பாராட்டு.

0
153959
aarthi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது மூன்று சீசன்கள் கடந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசனாக இருந்து வருகிறது. முதல் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்களும் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான ஆர்த்தியும் ஒருவர். நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.

நடிகை ஆர்த்தி பொதுவாக தனது உருவத்தை யாராவது கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது அதே போல மற்றவர்கள் கலாய்ப்பதற்கு முன்பாக தனது உருவ அமைப்பை தானே கலாய்த்து புகைப்படத்தை பதிவிட்டு விடுவார் ஆர்த்தி. ஆர்த்திக்கு பிரபல காமெடி நடிகர் கணேஷகருடன் திருமணம் நடைபெற்றது. மேலும், திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவர்களுக்கு குழந்தையும் இல்லாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை இருப்பினும் சின்னத்திரையில் தற்போது நடித்து வருகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார் இந்த நிலையில் நடிகை ஆர்த்தி கடந்த ஃபிப்ரவரி 29 ம் தேதி முனைவர் பட்டம் பெற்றுள்ளாராம். இந்த புகைப்படத்தை ஆர்த்தி நேற்று வெளியிட்டுள்ளார்.


Advertisement