இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா ? மீரா மிதுன் விவாகரத்தில் வெளுத்து வாங்கிய பிக் பாஸ் 1 நடிகை.

0
1573
meera
- Advertisement -

தற்போது தமிழ் நாட்டில் பல பிரச்சனை சென்று கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் மீரா மிதுன் பிரச்சனை சென்று கொண்டு தான் இருக்கிறது. மீரா மிதுனுக்கு அறிமுகம் தேவையா என்ன ? விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீராமிதுன். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னதாகவே அழகிப் போட்டியில் நடத்துவதாக கூறி பித்தலாட்டத்தை ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழங்கப்படும் பதிந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

-விளம்பரம்-

சமீப நாட்களாக பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய்,கமல் என்று பலரை பற்றி சர்ச்சை ஏற்படுத்தி வந்த மிதுன், சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகள் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார்.இதனால் விஜய் ரசிகர்கள் சார்பாக மீரா மிதுன் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

- Advertisement -

மேலும், விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளும் மீரா மிதுனை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சாந்தனு, நடிகை கஸ்தூரி, நடிகர் தீனா, விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் போன்ற பலர் மீரா மிதுன் குறித்து மறைமுக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகை ஆர்த்தியும், மீரா மிதுனை மறைமுகமாக திட்டி ட்வீட் போட்டுள்ளார். அதில், மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா,நடிகையாக இருப்பினும் ஜோ..தீஎன்று எல்லா மக்களுக்கும் தெரியும். தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது. வன்மையாக கண்டிக்கிறேன். பெண் இனத்தின் வெட்கக்கேடு. இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா??

-விளம்பரம்-

Advertisement