முகெனுக்கு தனது மோதிரத்தை பரிசளித்துள்ள அபிராமி.! அத அபிராமிக்கு யார் கொடுத்துனு பாருங்க.!

0
12839
Mugen

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தன. பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

abhirami

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர்.

இதையும் பாருங்க : 10 வருடத்திற்கு பின் தனது தந்தையை சந்தித்த லாஸ்லியா.! இவர் தான் அவர் தந்தையா.!

ஆனால், வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி ஆன பின்னர் அபிராமியிடம் முகென் குறித்து ஏதேதோ சொல்லி இருவருக்கும் சண்டையை ஏற்படுத்திவிட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறியபோது முகென் ஒரு சில நினைவு பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார்.

abhirami

சமீபத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த போது அவருக்கு அவரது டி-ஷர்ட் கூட அளித்து இருந்தார் முகென். இந்த நிலையில் அபிராமியும் முகெனுக்கு ஒரு மோதிரம் ஒன்றை அன்பு பரிசாக அளித்துள்ளார். அந்த மோதிரத்தை ஈஷா யோகா அபிராமிக்கு பரிசாக அளித்திருந்தார். அதனை அபிராமி எப்போதும் அணிந்து கொண்டு இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.