அட கொடுமையே அஜித் படத்துல நடிச்சிட்டு கடைசில இப்படி சீரியல் பக்கம் வந்துட்டாங்களே அபிராமி – எந்த சீரியல் தெரியுமா ?

0
2916
abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த மூன்று சீசன்களை விட கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரண மூன்றாவது சீசன் மாஸ்காட்டியது . பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அபிராமியும் ஒருவர்.

-விளம்பரம்-

இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது.

இதையும் பாருங்க : என்னது, சினேகாவை விட பிரசன்னா இத்தனை வயது சிறியவரா ? இது தெரியுமா உங்களுக்கு.

- Advertisement -

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை அபிராமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கூட கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியலில் நடித்து வரும் சூர்யா மற்றும் கயல் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்க செல்வது போல அபிராமி இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த எபிசோட் நாளை (பிப்ரவரி 22) ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement