‘ஏன் இந்த விளம்பரம்’ ஜூலியை விமர்சித்தாரா அபிராமி ? நீக்கப்பட்ட இன்ஸ்டா ஸ்டோரி, ஸ்க்ரீன் ஷாட்டை போட்டு திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0
642
Julie
- Advertisement -

ஜூலியை கிண்டல் செய்த அபிராமியை நெட்டிசன்கள் வெச்சு செய்யும் கமெண்ட்ஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தமிழில் ஐந்து சீசன்களை கடந்துள்ளது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் கவலை இருக்கும் நிலையில் தமிழில் புது வித்தியாசமான கான்செப்ட்டை விஜய் டிவி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்று அறிமுகப்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சி டிவி சொல் போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தார்கள். இதில் பிக் பாஸ் சீசன் முதல் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அபிராமியும், ஜூலியும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியில் அபிராமி குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்து வந்தது. இருந்தாலும் அபிராமி விளையாடி வந்தார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் அபிராமி-ஜூலி:

அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி தொடங்கிய உடன் ஜூலியும் அபிராமியும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அதிலும் ஜூலி இந்த வீட்டில் அதிகம் அபிராமி உடன் தான் இருந்தார். அதிலும் நிரூப் விஷயத்தில் ஜூலி அபிராமிக்கு சாதகமாக தான் பேசி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் அபிராமிக்கு யாரு பிடிக்கவில்லையோ, ஜூலி அவர்களிடம் பேசுவது கிடையாது. அதே போல் நாமினேஷனில் கூட அபிராமி யாரை நாமினேட் செய்தாரோ, ஜூலியும் அவர்களே தான் நாமினேட் செய்து இருந்தார். இப்படி இருவரும் சேர்ந்து பிற போட்டியாளர்களை விமர்சித்து இருந்தாலும் இவர்களுடைய நட்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல கமெண்ட்ஸ் தான் வந்து கொண்டிருந்தது.

ஜூலியை விமர்சித்த அபிராமி:

மேலும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் அவர் அவர்கள் தங்களுடைய வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் ப்ளூகிராஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இது நாய்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஜூலி ஒரு நாயை தத்து எடுத்து இருக்கிறார். அதோடு அந்த நாயை கையில் வைத்துக் கொண்டு இருந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் அபிராமி தன் இன்ஸ்டா ஸ்டோரியில், உண்மையாக அக்கறை இருப்பவர்கள் இப்படி செய்யமாட்டார்கள்.

-விளம்பரம்-

அபிராமியை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்:

விளம்பரத்திற்கு தான் இப்படி செய்வார்கள். ப்ளூ கிராஸ்ஸில் இருப்பவர்கள் உண்மையான அன்பு உள்ளம் கொண்டவர்கள் என்று நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். பிறகு அபிராமி அந்த பதிவை டெலிட் செய்து இருக்கிறார். ஆனால், இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அபிராமி பதிவிட்ட ஸ்டோரி குறித்து வறுத்து எடுத்து வருகிறார்கள். அதில் சிலர், ஏன் உங்களுக்கு இந்த பொறாமை அபி ஆன்ட்டி. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு. நீ டெலிட் பண்ணாலும் நீ மாட்டிக்கிட்ட பார்த்தியா? எதற்கு ஜூலியை டார்கெட் செய்து விமர்சிக்கிறீர்கள்.

ஷாக்ஷி -அபிராமி நட்பு:

நிகழ்ச்சியில் நன்றாகத்தானே இருந்தீர்கள் என்றெல்லாம் அபிராமியை தாக்கி கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போது அபிராமி, சாக்ஷி உடன் மிக நெருக்கமாக பழகி இருந்தார். பின் கவினுக்கும், ஷாக்ஷிக்கும் இடையில் பிரச்சனை வந்த பிறகு அபிராமி ஷாக்ஷியை விட்டுட்டு கவினுக்கு நெருக்கமான லாஸ்லியா உடன் பழகி இருந்தார். அதேபோல் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஜூலி இடம் நல்லா பழகி விட்டு வெளியே வந்தவுடன் ஜூலி குறித்து விமர்சித்து அமிராமி பேசி இருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் அபிராமி ஜூலியிடம் நடந்து கொண்டது எல்லாம் நாடகமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement