உள்ள இருக்கும் போது ரெண்டு பெரும் அவ்வளவு சண்டை போட்டாங்க.! இப்போ மட்டும் இப்படியா.!

0
5307
abhirami

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். 

Shakshi

பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் மோகன் வித்யாவை நேரில் சந்தித்துள்ளார் அபிராமி. அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/B1YxwJ9l9Pl/

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேறிய சாக்க்ஷியை நேரில் சந்தித்துள்ளார் அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சாக்க்ஷியிடம் நெருங்கி பழகி வந்தார் அபிராமி. ஆனால், இறுதியில் அவரிடமும் சண்டை போட்டுக்கொண்டார். இருப்பினும் தற்போது எதுவும் நடக்காதது போல மீண்டும் சாக்க்ஷியுடன் சந்தோசமாக போஸ் கொடுத்துள்ளார் அபிராமி.

-விளம்பரம்-
Advertisement