போடா கோ*** – படு கொச்சையாக பேசிய அபிராமி, அதுவும் யாரை சொல்லியுள்ளார் பாருங்க.

0
512
abhirami
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வார இறுதியை நெருங்கி உள்ளது . தமிழில் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-
niroop

நிகழ்ச்சியில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதோடு கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த வாரம் எலிமினேஷன்:

இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும், தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு வந்து இருக்கிறார். அதேபோல் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருந்தனர்.

கேப்டன் டாஸ்க் அணிகள்:

ஆனால், வனிதா தானாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் கேப்டனுக்காக டாஸ்க் சென்று கொண்டிருக்கின்றது. அதில், அனிதா, ஜூலி, பாலாஜி முருகதாஸ், அபிராமி என பலரும் போட்டியிட்டார்கள். இறுதியில் பாலாஜி முருகதாஸ், ஜூலி மோதினர். இதில் பாலாஜி அணிக்கு- தாமரை, ஸ்ருதி, அனிதா, நிரூப் ஆதரவு கொடுத்தார்கள். ஜூலி அணிக்கு- தாடி பாலாஜி, சினேகன், அபிராமி ஆதரவு கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

கேப்டன் டாஸ்கில் மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள்:

இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போது பிக் பாஸ் கருப்பு மற்றும் சிவப்பு நிற ஹார்ட் ஸ்டிக்கர்களை கொடுத்து இதில் யாருடைய ஸ்டிக்கர் அதிகமாக இருக்கிறதோ? அவர்கள் தான் இந்த வீட்டின் அடுத்த வாரம் கேப்டன் என்று சொல்கிறார். உடனே இரண்டு அணிகளும் வேகவேகமாக ஸ்டிக்கர்களை வீடு முழுவதும் ஓட்டுகிறார்கள். இதில் அபிராமி ஜூலிக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஓட்டுகிறார். அப்போது அபிராமி ஸ்டிக்கரை எடுத்துவிட்டு கூட ஓட்டலாமா? என்று பிக்பாஸ் இடம் கேட்டு எதிரணி ஒட்டியிருந்த ஸ்டிக்கரை கிழித்துவிட்டு ஓட்டுகிறார். உடனே பாலாஜி முருகதாஸ் அணியில் இருந்த நிரூப்பும் எதிர் அணி ஸ்டிக்கரை கிழித்து மாற்றி ஒட்டுகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்குள் விவாதம் வருகிறது.

நிரூப்பை அசிங்கமாக திட்டிய அபிராமி:

அப்போது அபிராமி நிரூப்பை ‘போடா கோ**’ என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். ஆனால், இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் அபிராமியின் மைக்கில் தெளிவாகவே கேட்டது. இப்படி இவர்கள் இருவரும் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், அபிராமி ஆடி வரும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை டதிட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement