முகெனுக்கு முன்னர் அபிராமி இவரை தான் காதலித்தாராம். என்னடா லிஸ்ட்டா போது என்று புலம்பும் ரசிகர்கள்.

0
6461
anhirami-mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது. அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் மற்றும் ரொமான்ஸுக்கு பஞ்சமே இருக்காது. முதல் சீசனில் ஓவியா- ஆரவ், இரண்டாவது சீசனில் மஹத்-யாஷிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

-விளம்பரம்-
kavin abirami"

- Advertisement -

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தான் ஏகப்பட்ட காதல் கதைகள் ஓடியது. அபிராமி – கவின், சாக்ஷி-கவின், அபிராமி – முகென், கவின் – லாஸ்லியா, தர்ஷன் – ஷெரின் என்று பல லவ் ஸ்டோரி ஓடியது. ஆனால், இந்த சீசனில் முதன் முதலாக காதலை ஆரம்பித்தது நடிகை அபிராமி தான். பிக் பாஸ் 3 துவங்கிய ஒரு சில நாளிலேயே கவின் மீது காதல் இருப்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால், கவின், அபிராமி காதலுக்கு செவி சாய்க்காததால் பின்னர் முகென் மீது காதலில் விழுந்தார் அபிராமி.

இதையும் பாருங்க : விஷாலின் அந்தரங்க உறுப்பு பற்றி பேட்டியிலேயே பேசிய ஸ்ரீரெட்டி. வைரலாகும் வீடியோ.

பின்னர் முகெனை உருகி உருகி காதலித்து வந்தார் அபிராமி. ஆனால், முகெனும் அபிராமி காதலை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து கொண்டே தான் வந்தார். இருப்பினும் தொடர்ந்து முகெனை வெறித்தனமாக காதலித்து வந்தார் அபிராமி. ஒரு கட்டத்தில் முகெனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்ததும் அவருடன் சண்டை போட்டு காதலை முறித்துக்கொண்டார் அபிராமி. இருப்பினும் முகெனுடன் நல்ல நட்பில் இருந்து வருவதாக கூறினார் அபிராமி.

-விளம்பரம்-
abhirami mugen"

இப்படி அபிராமிக்கு அடிக்கடி காதல் வந்து போகும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள அபிராமி. என்னோட முதல் மூன்று வருடங்கள் போச்சு. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது ஒருவரை ஆழமாக காதலித்தேன். ஆனால், அவருடைய அம்மாவிற்கு என்னை பிடிக்கவில்லை. என்னுடைய அம்மாவிற்கு அவரை பிடிக்கவில்லை. இதனால் அந்த காதல் போய் விட்டது என்று கூறியுள்ளார். மேலும், பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஒருவர் மீது க்ரஷ் ஏற்பட்டது. அவருக்கு தான் நான் முதல் முதலில் முத்தம் கொடுத்தேன். இதை எல்லாம் என் அம்மா பார்க்காமல் இருக்க வேண்டும் என்று சிரித்தபடியே கூறியுள்ளார் அபிராமி. அபிராமியின் காதல் கதைகளை கேட்டு என்னடா லிஸ்ட்டா போகுது என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Advertisement