‘தன் அக்காவிடம்(பாவனி) காதலை சொன்ன அமீர்’ – ப்ரோமோவை பார்த்துவிட்டு அபிஷேக் போட்ட கமன்ட்.

0
736
abhishek
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வந்தது அபிநய் மற்றும் பவானி உறவுதான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-33.png

பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது . இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல். இவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு குறித்து கிசுகிசுகிளம்புவதற்கு முதல் காரணமே இவர்கள் இருவரும் தான். இருப்பினும் அபிநய் தான் தன்னிடம் பின்னாலே வந்து பேசுகிறார்.

- Advertisement -

பாவனி அமீர் ரொமான்ஸ் :

அவருக்கு என் மீது ஒரு பீலிங்ஸ் இருப்பது உண்மை தான் ஆனாலும், அவரிடம் என்னிடம் பேச வேண்டாம் என்று என்னால் நேரடியாக சொல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார் பாவனி. கடந்த சில நாட்களாகவே பாவனி மற்றும் அபிநய் இருவரும் பேசுவது இல்லை. கடந்த சில நாட்களாகவே பாவனியிடம் பயங்கரமாக வழிந்து வருகிறார் அமீர். பவானியின் அழகை ரசிப்பது, சைட் அடிப்பது, தனக்கு பாவனி போல தான் ஒரு பெண் வேண்டும் என்று ரொமான்ஸ்ஸை அள்ளி வீசி வருகிறார் அமீர்.

அபிஷேக்கின் கருத்து :

இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிரியங்காவிடம் பேசும் அமீர், தைரியம் இருந்த லவ் சொல்லி பாருனு சொன்னா சொல்லிட்டேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘அபிஷேக், நீ இருந்து இருக்கனும்’ என்று பதிவிட்டு அபிஷேக்கை டேக் செய்து இருந்தார். இதற்கு அபிஷேக் ‘நட்புக்கு தான் குழி எல்லாம், காதலுக்கு இல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

காதலா ? ஸ்கிரிப்ட்டா ?

பிக் பாஸ் வீட்டில் அபிஷேக் இருந்த போது பாவனி தன்னுடைய அக்கா என்று கூறி இருந்தார். அதே போல பாவனி, அமீரை தம்பி என்று தான் பல முறை அழைத்து வருகிறார். ஆனாலும், உன்னை நான் அக்காவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமீர் கூறி வருகிறார். அதே போல அமீர் செய்வது எல்லாம் பார்க்கும் போது போலித்தனமாக இருந்தாலும் ஒருவேளை இது பிக் பாஸ் கொடுத்த ஸ்க்ரிப்ட்டாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறது.

இருப்பினும் ஒரு வேலை அமீர், பாவனியை உண்மையாகவே காதலித்தால் ஒரு விதவை பெண்ணிற்கு வாழ்வு கொடுத்தார் என்ற பெருமையுடன் வெளியில் வருவார் அமீர். ஆனால், இவை அனைத்தும் பிக் பாஸுக்காக ஆடியும் நாடகம் என்றால் அபிநய்யை விட அமீரின் பெயர் டேமேஜ் ஆகும் என்பதும் மட்டும் சந்தேகம் இல்லை. உண்மையில் இது காதலா இல்லை பிக் பாஸின் ஸ்க்ரிப்ட்டா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement