தெலுங்கு பிக் பாஸில் ஆடை சர்ச்சையில் சிக்கிவரும் சிகரம் தொடு பட நடிகை.

0
100685
- Advertisement -

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழை போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து தற்போது 4வது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சீசனின் தெலுங்கு ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர் அந்த வகையில் இந்த சீஸனின் கலந்து கொண்டுள்ள நடிகை மோனல் காஜரும் ஒருவர்.

-விளம்பரம்-

தமிழில் 2014 ஆம் வெளியான “சிகரம் தொடு” படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனல் காஜர். வங்கியில் வேலை செய்து வந்த இவர் பின்னர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ இவரது யோகா ஆசிரியரின் யோசனையால் தான்.1987 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் வேலை செய்து வந்தார்.

- Advertisement -

பின்னர் தன்னுடைய யோகா ஆசிரியரின் அறிவுரைபடி 2011 ஆம் ஆண்டு ரேடியோ மிர்ச்சி நடத்திய அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் குஜராத் பட்டதை வென்றார். இவர் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானது தெலுங்கில் கடந்த 2012 அம ஆண்டு வெளியான ‘சுடிகாடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான். பின்னர், 2012 ஆம் ஆண்டு வெளியான “டிராகுலா ” எனும் மலையாள படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானார்.

இவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே 5 படங்களில் ஒப்பந்தம் ஆனார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.தமிழில் இதுவரை இவர் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தனது சொந்த மண்னான குஜரத்திற்கே சென்று விட்டார். அங்கு ஒரு சில படங்கள் கைகொடுக்க மீண்டும் வேறு மொழி படங்களில் நடிக்காமல் போனார். தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர், பிக் பாஸ் வீட்டில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகிறார். இதனால் பிக் பாஸ் தெலுங்கு ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement