நிக்சன் வெளியேற்றத்தை கொண்டாடும் வகையில் ஐசுவின் தந்தை போட்ட இன்ஸ்டா பதிவு – மனுஷன் செம காண்ட்ல இருக்கார் போல.

0
244
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு, மாயா, நிக்சன், மணி, ரவீனா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் நடைபெற்று இருக்கிறது. இந்த ரவீனா மற்றும் நிக்சன் ஆகிய இரண்டு பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் ரவீனா வெளியேறியதை விட நிக்சனின் வெளியேற்றத்தை நினைத்து தான் சமூக வலைத்தளத்தில் பலரும் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஐசுவின் தந்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஸ்பைடர் பட காட்சியை பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், அதில் ‘யாராவது காரணமே இல்லாமல் Vibe ஆவார்களா, அதான் இல்லை, நான் ஒரு காரணத்திற்காக தான் Vibe ஆகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். பின் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்த்து பலருமே காதலிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை எழுதி இருந்தார்.

- Advertisement -

பின் ஐசு வரும்போது நிக்ஸன் ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள். குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது. பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸுக்கு பின்னர் ஐசு எந்த ஒரு பேட்டியையும் அளிக்காமல் இருந்து வருகிறார். ஆனால், தனது செயலுக்கு மணிப்பு கேட்டு பதிவு ஒன்றை மட்டும் போட்டு இருந்தார். மேலும், பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்ததற்கு மன்னிப்பும் கேட்டு இருந்தார். இது ஒருபுறம் இருக்க ப்ரதீபிடம், ஐசுவின் தந்தை மன்னிப்பு கேட்ட ஸ்க்ரீன் ஷாட்டை பிரதீப் பதிவிட்டு இருந்தார். அதில் உரையாடலில் ‘ நண்பா, எப்படி ஒவ்வொரு நாளையும் கடப்பது? மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோசப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பற்றுங்கள். ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ என்று மெசேஜ் செய்துள்ளார். ஆனால், அந்த பதிவை சில மணி நேரத்தில் பிரதீப் டெலீட் செய்துவிட்டார். இப்படி இருக்க நிக்சன் வெளியேற்றத்தை எண்ணி ஐசுவின் தந்தை இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்.

Advertisement