மீண்டும் ஐஸ்வர்யா..பிக் பாஸை அசிங்கப்படுத்திய ஆர்த்தி..! எம்மாடி..? இப்படியா சொல்றது.!

0
158
Aishwarya

காமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் விமர்சித்து அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார் நடிகை ஆர்த்தி.

அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெச்சி செய்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற போன் டாஸ்க் ஒன்றில் சென்ராயனிடம் பொய் கூறி அவரது தலைமுடிக்கு கலர் செய்ய வைத்து அடுத்த வார நாமினேஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டார் ஐஸ்வர்யா.

சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்கில் வெற்றி பெற்றதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து. சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த காமெடி நடிகை ஆர்த்தி, டாஸ்க் உள்டாவா சொல்லிட்டாயேமா ஐஸ்வர்யா தத்தா நல்லா பொளச்சிப்ப. நல்லா புரிஞ்சி புரியாத மாதிரி நடிப்பு, ஐஸ்வர்யா ஆர்மி கவலபடாதீங்க டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் அவங்களுக்கு தான் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நடிகை ஆர்த்தி, ஐஸ்வர்யாவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். அதிலும் சமீப காலமா பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு அதிகம் ஆதரவாக இருந்து வருவதால் ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸிற்கு மாமியார் என்றும் ஏற்கனவே ட்விட்டரில் கிண்டலடித்துருந்தார் ஆர்த்தி. ஒரு வேலை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்திரருந்தால் ஐஸ்வர்யாவிற்கு நல்ல ஒரு பாடத்தையே கற்று கொடுத்திருப்பார் ஆர்த்தி.