உயிர் மட்டும் இல்ல *..யிரும் முக்கியம்..! ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திய கமல்.!

0
275
Aishwarya-Bigg-Boss

நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் செண்ரயான், ஐஸ்வர்யாவிரற்காக முடியை கலர் செய்து கொண்ட டாஸ்க் பற்றிய உரையாடல் தான் அதிகப்படியாக இருந்தது. இந்த வார போன் டாஸ்கின் போது ஐஸ்வர்யா அடுத்த வார நாமினேஷனில் இருந்து தன்னை காப்பற்றிக்கொள்ள சென்ராயனிடம் பொய் சொல்லி டாஸ்கை செய்யவைத்தார் என்று கமல் கூறியிருந்தார்.

Sendrayan

ஐஸ்வர்யா செய்த பித்தலாட்டத்தை குறும்படம் போட்டு நிரூபித்தார் கமல். அனைவருமே ஐஸ்வர்யா கூறிய பொய் மிகவும் தவறு என்று ஐஸ்வர்யா பக்கம் திரும்ப அதனை மறைக்க அடுக்கடுக்காக பொய்களை சொன்னார் ஐஸ்வர்யா. பின்னர் வழக்கம் போல யாஷிகாவிடம், முறையிட்டு கொண்டிருந்த ஐஸ்வர்யா ஏன் அனைவரும் என்னையே டார்கெட் செய்றங்கா, நான் அவருடைய உயிரையா எடுத்துவிட்ட, ஜஸ்ட் எ ஹேர் தான’ என்று கூறுகிறார்.

ஐஸ்வர்யா அப்படி சொன்னதை சுட்டிகாட்டிய கமல்,நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாற்றீங்க சில சமயம் அழறீங்க, சில சமயம் கோவபடறீங்க. யாரும் அழலனு சொல்ல முடியாது மும்தாஜும் அழுவாங்க. ஆனா நீங்க மத்தவங்க கருத்துக்கு ரொம்ப குறைவா பேசுறீங்க, இப்போ கூட சொன்னங்கீங்க நான் என்ன அவருடைய உயிரையா எடுத்துட்டனு சொல்றீங்க என்று கூறும் கமல் தனது தலை முடியை பிடித்து காண்பித்து உயிருகும் இதுக்கும் நெறையா வித்யாசம் இருக்கு என்று கூறுகிறார்.

Bigg-Boss-sendrayan

கமல் கூறியதை கேட்டு அரங்கமே கை தட்டி ஆரவாரம் செய்கிறது.இதற்கு பதில் கூறிய ஐஸ்வர்யா, சார் முதல் வாரத்திலிருந்தே என்னை அனைவரும் டார்கெட் செய்கின்றனர். அதனால் நான் ஒவ்வொரு வாரமும் என்ன செய்ய வேணும்னு யோசித்தேன் அதனால் தான் இந்த வாரம் பொய் சொல்லி சென்ராயானை டாஸ்க் செய்ய வைத்தேன் என்று ஒப்புக்கொண்டு விடுகிறார்.