யாஷிகாவே வாவ் சொன்ன அளவுக்கு ஐஸ்வர்யா நடத்திய போட்டோ ஷூட்.

0
4771
ayswarya
- Advertisement -

நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வந்த இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலலத்தை மட்டுமல்லாமல் இவரது வாழ்க்கையும் மாற்றியது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ரசிகர்கள் மனதில் முதல் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ பொல்லாத உலகில் பயங்க கேம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். , தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார்.

- Advertisement -

இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தன்னை பற்றிய புகைப்படங்களையும், அப்டேட்களையும் பதிவிட்டு வருவதை மட்டும் எப்போதும் மறப்பதில்லை.அந்த வகையில் சமீபத்தில் இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை இவருக்கு நெருங்கிய தோழியாக இருந்து வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக தான் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா தத்தா நடத்திய போட்டோ ஷூட்டை பார்த்து நடிகை யாஷிகா வாவ் என்று பதிவிட்டிருக்கிறார். இவரை போலவே பிரபல தொகுப்பாளினியான பாவனாவும் ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்து வாவ்வென்று வாயைப் பிளந்து இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement