நாடோடிகள் படத்தில் வந்த நடிகையா இப்படி ஒரு படு கவர்ச்சி உடையில். வைரல் புகைப்படம்.

0
3117
shanthi
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில நடிகைகள் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினாலும் அவர்கள் நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த வகையில் நாடோடிகள் படத்தில் வரும் காதல் ஜோடியை கண்டிப்பாக மறந்திருக்க மாடீர்கள். சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சசிகுமார், விஜய் வசந்த, அனன்யா, பரணி, அபிநயா கஞ்சா கருப்பு என்று ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-
Image

அதேபோல இந்த படத்தில் சரவணன் மற்றும் பிரபா என்ற காதல் ஜோடியை நிச்சயம் மறந்து இருக்க வாய்ப்பே கிடையாது. அதிலும் சம்போ சிவ சம்போ பாடல் இந்த படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்து இருக்கும். இந்த படத்தில் இவர்களது காதலுக்கு உதவப்போய் தான் சசிகுமார் மற்றும் அவர்கள் நண்பர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும் . இந்த காதல் ஜோடியில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் என் பெயர் சாந்தி தேவி.

- Advertisement -

நாடோடிகள் படத்திற்கு பின்னர் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் ரியாஸ் கான், லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பரிட்சியமான நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு பின்னர் நடிகை சாந்தியை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. நாடோடிகள் படத்தில் சாதாரண அழகில் இருந்த இவர் நிஜத்தில் படு அழகாக இருக்கிறார்.

Image

தற்போது இவர் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ளார். இது இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், பிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ளார். இது இணையதள விளையாட்டான பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் சாந்தியின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement