அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தமாக ஆட்டம் போட்ட அமீர்- அதுவும் இவருடன், வீடியோ பாருங்க

0
692
amir
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே சூப்பர் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் வெளியானதில் இருந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், இந்த பாடல் தான் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய அமீர்:

அதோடு கடந்த மாதம் இந்த பாடல் யூ டியூபில் வெளியானதில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை சுமார் 150 மில்லியன்களைக் கடந்த பார்வையாளர்களை பெற்று உலகெங்கும் அரபி குத்து பாடல் வைரலாகி உள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் நட்சத்திரங்கள் பலரும் விஜயின் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது அமீர் மற்றும் அலைனா இருவரும் வெறித்தனமாக அரபி குத்து பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோவை வெளியிட்டு விட்டார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர்:

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அமீர். இவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் சிறந்த நடன இயக்குனர் ஆவார்.

அமீர் – பாவனி காதல்:

சிறு வயதிலேயே அமீர் தன்னுடைய பெற்றோர்களை இழந்து தனியாக போராடி வளர்ந்தவர். பின் தன்னுடைய அம்மா ஆசை படி நடனப் பள்ளி நடத்தி வருகிறார். அப்போது தான் இவருக்கு அலைனா அறிமுகம் கிடைத்தது. தற்போது அவர்களின் குடும்பத்தில் ஒருவராக அமீர் வாழ்ந்து வருகிறார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்டு பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால், பாவனி இருவரும் நண்பர்கள் என்று சொல்லிவிட்டார். நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

Advertisement