அமீருடனான காதலை பிரேக்-அப் செய்து கொண்டாரா பாவனி – இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

0
2742
Pavni
- Advertisement -

பிக் பாஸ் பாவனியை காதலித்து அமீர் ஏமாற்றி விட்டதாக எழுந்திருக்கும் சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை இறுதி சுற்று வரை ரசிகர்கள் அனுப்பி வைத்து இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள்.

பாவனி- அமீர் படங்கள்:

இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள். அதேபோல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். பின்னர் எப்படியோ அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

பாவனி- அமீர் காதல்:

அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகிறது. மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இருவருமே அடிக்கடி நிகழ்ச்சிகளிலும், அவுட்டிங் செல்வதுமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் பாவனி- அமீர் இடையே பிரேக் அப் ஆகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாவனி- அமீர் பிரேக் அப்:

அதாவது, சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பாவனி பதில் அளித்து இருந்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா என்று கேள்வி எழுப்பிருக்கிறார். அதற்கு பாவனி ஆமாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதை பார்த்த உடனே ரசிகர்கள் பலரும் உங்கள் இருவருக்கும் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா? என்ன பிரச்சனை? ஏன் பிரிந்து விட்டீர்கள்? கல்யாணம் இல்லையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால், இதற்கு பாவனி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

Advertisement