அஜித்தின் 'துணிவு' படத்தில் மூன்று பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் - வெளியான புகைப்படம். ரசிகர்கள் வாழ்த்து.

By Rajkumar · 3/10/2022

5அஜித்தின் துணிவு படத்தில் பிக் பாஸ் காதல் ஜோடி இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பின் RRR ராஜமௌலி குறித்து ராம் சரண் பகிர்ந்த வீடியோ - வச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்.

துணிவு படம்:

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

படம் குறித்த தகவல்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டாடி இருந்தார்கள். தற்போது தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிக் பாஸ் ஜோடி இணைந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அமீர்- பாவனி ரெட்டி:

அதாவது, சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அமீர்- பாவனி ரெட்டி. இவர்கள் இருவரும் சின்னத்திரையின் மிக பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதோடு பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தையும் இவர்கள் தான் பெற்றிருந்தார்கள். இதற்கு பிறகு இவர்கள் இருவரும் படங்கள், நிகழ்ச்சிகள் என்று பிசியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

துணிவு படத்தில் பிபி காதல் ஜோடிகள்:

இந்நிலையில் தற்போது அமீர்- பாவனி ரெட்டி இருவரும் அஜித்தின் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிறது. அது அதுமட்டுமில்லாமல் பாங்காங் படப்பிடிப்பில் அமீர்- பாவனி ரெட்டி இருவருமே கலந்து கொண்டிருக்கின்ற புகைப்படம் ஒன்றி, சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்கு அமீர்- பாவனி ரெட்டிக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full