pan இந்திய படம், சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு சொல். சமீப காலமாகவே திரைத்துறையில் வெளியாகும் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. அதற்கு Pan இந்தியா படங்கள் என்று பெயர் வைத்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் படங்கள் மற்றும் பிரம்மாண்ட செலவில் உருவாகும் படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வெளியாகிவிடுகிறது. பொதுவாக தமிழ் நடிகர்களின் படங்கள் தான் மற்ற மொழிகளில் வெளியாகும். மற்ற மொழி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியாவது குறைவு தான்.
ஆனால், இந்த கூற்றை மாற்றியது பாகுபலி திரைப்படம் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரண்டு மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடைந்தது. இதனை தொடர்ந்து வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுகு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து Pan இந்திய படம் என்ற அந்தஸ்தை பெற்றது.
இதையும் பாருங்க : மகளே இல்லை என்று ஒதுக்கிய ராஜ்கிரண் – முனிஷ் ராஜாவிற்கு திருமணம் செய்து வைத்த பிரபல டிவி சேனல்.
Pan இந்தியா படங்கள் :
அதன் பின்னர் வந்த பாகுபலி 2வும் சரி, சமீபத்தில் வந்த புஷ்பா, RRR படமும் சரி Pan இந்திய லெவலில் வெற்றி பெற்றது. இப்படி தெலுங்கு படங்கள் Pan இந்திய அந்தஸ்தை பெற்று வந்த நிலையில் கன்னடத்தில் வெளியான Kgf திரைப்படமும் இந்திய அளவில் வெற்றி பெற்று Pan இந்தியா அந்தஸ்த்தை பெற்றது. ஆனால், தமிழ் சினிமாவில் சமீப காலமாக pan இந்திய அளவில் கொண்டாடப்பட்ட படங்கள் வெளியாகவில்லை.
கேலி செய்யும் தெலுகு ரசிகர்கள் :
இறுதியாக ரஜினி நடித்த 2.0 திரைப்படம் தான் இந்திய அளவில் வெற்றி பெற்று அப்படி ஒரு அந்தஸ்தை பெற்றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த திரைப்படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தொடர்ந்து தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து கொண்டு வருகிறார்கள். இதற்கு தமிழ் ரசிகர்களும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் ரசிகர்கள் பதிலடி :
பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் தான் தேர்வு சினிமா தென்னிந்திய அளவில் கவனத்தை ஈர்த்து இருந்தது தமிழில் எந்த படங்கள் வந்தாலும் அதனை பாகுபலி உடன் ஒப்பிட்டு தொடர்ந்து தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து வந்து கொண்டு தான் இருக்கின்றனர் அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் கேலி செய்தனர். இதற்கு தமிழ் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர்.
ராம் சரண் பகிர்ந்த வீடியோ :
இருந்தும் கடந்த சில தினங்களாக தெலுங்கு ரசிகர்கள் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை கேலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெளியான சில நாள் கழித்து RRR நாயகன் ராம் சரண் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் RRR பட டைட்டில் கார்டுக்கு திரையரங்கில் கொடுக்கபட்ட ரெஸ்பான்ஸை காட்டி இருக்கின்றனர். அதை பகிர்ந்துள்ள ராம் சரண் ‘One And Only ராஜமௌலி’ என்று பதிவிட்டு இருக்கிறார். ராம் சரணின் இந்த பதிவை தமிழ் ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.