அடுத்தகட்டத்திற்கு சென்ற அமீர் – பாவனி ஜோடி – குவியும் ரசிகர்களின் வாழ்த்து மழை

0
1490
amir
- Advertisement -

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி-அமீர் பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள். அதேபோல் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி.

-விளம்பரம்-
amir

பாவனி- அமீர் படங்கள்:

பின் இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தார்கள். அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகிறது. இருந்தாலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் கேட்டு கொண்டே இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இருவருமே அடிக்கடி நிகழ்ச்சிகளிலும், அவுட்டிங் செல்வதுமாக இருக்கிறார்கள்.

சோசியல் மீடியாவில் பாவனி:

சில மாதங்களாக பாவனி- அமீர் இடையே பிரேக் அப் ஆகி விட்டதாக கூறப்பட்டது. அதற்கேற்ப இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் சிங்கிளா? என்று கேட்க பாவனி ஆமாம் என்று சொல்லி இருந்தார். இதை பார்த்த உடனே ரசிகர்கள் பலரும் உங்கள் இருவருக்கும் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா? என்ன பிரச்சனை? ஏன் பிரிந்து விட்டீர்கள்? கல்யாணம் இல்லையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனை அடுத்து சமீபத்தில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அமீர்- பாவனி இருவரும் பேட்டி அளித்திருந்தார்கள்.

பாவனி- அமீர் வாங்கிய புது கார்:

அதில் நாங்கள் இருவரும் பிரேக் அப் செய்யவில்லை. இருவரும் இணைந்து ஒரே வீட்டில் இருப்பதாகவும் கூறியிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் தற்போது படங்களில் பிஸியாக பணியாற்றி வருவதால் திருமணம் குறித்து பிறகு அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். பின் அதன் முன் எடுத்த கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement