பாவனியை கேவலப்படுத்தி பேசிய அனிதா – நெத்தியடி பதில் கொடுத்த அமீர். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
652
amir
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தும் சோசியல் மீடியா முழுவதும் அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்த பேச்சுகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இதேபோல் முதல் சீசனில் ஓவியா-ஆரவ் மருத்துவ முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் பாவனி , அமீர். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. இருந்தாலும் இவர் தன் கணவனின் மறைவுக்கு பின் சில காலம் மீடியாவில் இருந்து விலகி இருந்து மீண்டும் சின்னத்திரை சீரியல், படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

அமீர் – பாவனி காதல் விவகாரம் :

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி திறமையாக விளையாடி இருந்தார். அதேபோல் அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று ஒரு நாள் அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் , திருமணம் செய்து கொள்கிறேன், என்று கூறியிருந்தார். ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்று சொல்லியும் மறுத்து வந்திருந்தார். இருந்தும் அமீர் விடாமல் தன்னுடைய காதலை தெளிவாக சொன்னார்.

பாவனி குறித்து பேசிய அனிதா :

பின் ஒரு நாள் இரவில் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது போல் ஒரு காட்சி வந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக அமீரை தாக்கி பேசி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்தும் அதை பற்றியே விமர்சனம் சென்று கொண்டு இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர்கள் இருவரும் ஒன்றாக தான் அடிக்கடி ஊர் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட பிரியங்கா, மதுமிதா, பாவனி, அமீர், அபிஷேக் ஆகியோர் ஒன்றாக அவுட்டிங் சென்ற வீடியோக்கள் கூட வைரலானது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் பாவனி குறித்து பேசிய அனிதாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமீர்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா, தொடர்ந்து மற்றவர்களை பற்றி தான் அதிகம் குறை சொல்லி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாவனி குறித்து பேசி இருந்தார். அதில், பாவனி என்ன விளையாட்டு விளையாடினார் என்று அவர் எல்லாம் மூன்றாவது இடத்திற்கு வந்து இருக்கிறார். சொல்லப்போனால் நீ வந்து இருக்க வேண்டும் நிரூப். பாவனி பிக் பாஸில் அமீரை லவ் பண்ணதை தவிர வேறு ஒன்றும் பண்ணவில்லை.

அமீரின் பதிலடி :

அவர் என்ன கேம் ஆடினார். அவரின் ரசிகர்களால் தான் அவர் பைனல் வரை வந்தார் என்று கூறி இருந்தார் அனிதா. இந்த வீடியோவால் பாவனியின் ரசிகர்கள் அனிதாவை திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை கண்ட அமீர், பாவனி குறித்து பேசிய அனிதா மற்றும் நிரூப், சுருதி, தாமரைக்கு அமீர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், எதுவும் செய்யாமல் யாரும் இறுதி போட்டி வரை செல்லவில்லை. தன்னந்தனியாக நின்று கேமை விளையாடியது பாவனி மட்டும் தான் என்று கூறி இருக்கிறார். இதற்கு பாவனி நன்றி தெரிவித்து இருக்கிறார்.

Advertisement