விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

பெயரை டேமேஜ் செய்துகொள்ளும் அமீர் :

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அமீர் ரசிகர்களுக்கு புதிய முகம் தான். இவர் வந்த ஒரு சில நாட்களில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் சரியான பேசுகிறார் என்ற கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயர் செம டேமேஜ் ஆகி இருக்கிறது.

Advertisement

முகம் சுழிக்க வைக்கும் அமீர் :

அதற்கு முக்கிய காரணமே பாவனியிடம் இவர் நடந்துகொள்ளும் விதம் தான். தன்னை விட வயதில் பெரியவரும், கணவரை இழந்துவருமான பாவணியை இவர் லவ் செய்கிறேன் என்று எப்போதும் அவர் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு ஆறுதல் சொல்வது போல அவருக்கு முத்தம் கொடுத்து இருந்தது பலரை முகம் சுழிக்க வைத்தது.

அமீரின் உண்மையான நிலை :

பாவனி எத்தனையோ முறை இவரை தம்பி என்று அழைத்தும், இவரது காதலுக்கு நோ என்று சொல்லியும் இவர் பாவனியை விடுவதாக இல்லை. ஆனால், இவரது உண்மை நிலையை அறிந்தால் இவரா இப்படியெல்லாம் செய்வது என்று நீங்களே நினைப்பீர்கள். சிறுவதிலேயே தாய் தந்தையை இழந்து அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் தான் அமீர்.

Advertisement

ராணுவத்தில் சேர ஆசை :

அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருளாக இவரை சூழ்ந்து இருக்கிறது. இவருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே லட்சியம். இதனால் ஊட்டியில் ராணுவத்தில் சேரக்கூடிய படிப்பை படித்து இருக்கிறார்.

Advertisement

கையில் இருக்கும் டாட்டூ :

மேலும், இவரது கையில் 4 இன்ச் அளவில் ஒரு தேசிய கொடியின் டாட்டூ கூட இருக்கும். ஆனால், சில பல காரணங்களால் இவரால் இன்னும் ராணுவத்தில் சேர முடியவில்லை. மேலும், இன்றளவும் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஒரு மிலிட்டரி டிசிப்ளைன் வாழ்க்கையை தான் அமீர் வாழ்ந்து வருவதாக அமீரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். அப்படி இருந்தும் அவர் ஏன் இப்படி நடந்துகொண்டு வருகிறார் என்பது தான் தெரியவில்லை.

Advertisement