பாத்ரூமில் எட்டி பார்த்த அமுதவாணன்,வீடியோவை கண்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள். உள்ள இருந்தது யார் தெரியுமா ?

0
516
amudhavanan
- Advertisement -

பாத்ரூமில் அமுதவாணன் எட்டிப் பார்த்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 45 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் இறுதியில் நிகழ்ச்சியை விட்டு யார் வெளியே போகிறார்கள் என்று ஆர்வத்துடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

அமுதவாணன் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலர் மட்டும் தான் மக்களுக்கு பரிச்சயமான நபராக இருக்கிறார்கள். அந்த வகையில் அமுதவாணனும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன்:

தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டு வந்தார். பின் இவர் ஜனனி உடன் கூட்டணி வைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அமுதவாணன் அதிகம் ஜனனியுடன் தான் பேசிக் கொண்டும், ஜனனியை கைப்பாவையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் வீட்டில் உள்ள போட்டியாளர்களே கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பாத்ரூமில் எட்டிப்பார்த்த அமுதவாணன்:

அதோடு அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் ஜனனியும் செய்து வருகிறார். ஜனனிக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார். இந்த நிலையில் அமுதவாணன் குறித்த ஒரு சர்ச்சை வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, போட்டியாளர் ஒருவர் பாத்ரூமில் உள்ளே இருந்திருக்கிறார். கதவு மூடி இருக்கும்போது அமுதவாணன் ஓரமாக நின்று எட்டிப் பார்த்திருக்கிறார். பின் வேறு ஒருவர் சத்தம் கேட்டவுடனே அமுதவாணன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

விளாசி எடுக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த பலருமே, ஒருவேளை பாத்ரூமில் ஜனனி இருந்திருப்பாரோ? என்று கூறி வருகிறார்கள். இன்னும் சிலர், பாத்ரூமுக்கு வெளியே இருக்கும் செருப்பு ராபர்ட் மாஸ்டரது போல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆக, மொத்தம் யாராக இருந்தாலும் பாத்ரூமில் இருக்கும் போது எட்டி பார்ப்பது மிகவும் தவறான ஒன்று என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த வார இறுதியில் கமலஹாசன் இதற்கு என்ன பதில் கூற இருக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement