நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா ஷூட்டிங், அரசியல், பிக் பாஸ் என்று படு பிஸியாக இருந்து வரும் கமலுக்கு சமீபத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. மேலும், அவருக்கு இருதய தொடர்பான சிகிச்சை நடைபெற்று வருதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

ஆனால், உண்மையில் கமலுக்கு இருதய பிரச்சனை எல்லாம் கிடையாது. சமீபத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியா திரும்பினார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் கமலுக்கு லேசான இரும்பல் ஏற்பட்டுள்ளது. பின்னர் போரூர் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதையும் பாருங்க : ‘அண்ணன் – தங்கை செண்டிமெண்ட்’ பிரபல நடிகருக்கு தங்கையாகும் அனிதா சம்பத். யார் பாருங்க.

Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல் ‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அவர் இந்த வார இறுதியில் நடைபெறும் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேலை அவர் கலந்துகொள்ளவில்லை என்றால் இந்த வாரம் எலிமிநேஷன் அறிவிப்பு இருக்குமா ? இல்லை அடுத்த வாரம் கமல் வந்த பின்னர் இரண்டு எலிமினேஷனாக நடைபெறுமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

Advertisement
Advertisement