‘அண்ணன் – தங்கை செண்டிமெண்ட்’ பிரபல நடிகருக்கு தங்கையாகும் அனிதா சம்பத். யார் பாருங்க.

0
649
AnithaSampath
- Advertisement -

பிரபல ஹீரோவுக்கு தங்கையாக அனிதா சம்பத் நடிக்கும் படத்தின் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதற்கு முன்பே இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து தனெக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர். இதனால் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. பின் இவர் காப்பான் போன்ற சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது.

-விளம்பரம்-

அதன் மூலம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நிறைய விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசையும் அனிதா வென்றார். இப்படி ஒரு நிலையில் நடிகை அனிதா சம்பத் நடிக்கும் படத்தின் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. உதய் புரொடகஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதையும் பாருங்க : 6 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன். 6 மாதங்கள் கழித்து முதன் முறையாக மகனின் முகத்தை காட்டிய ஸ்ரேயா கோஷல்.

- Advertisement -

தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விமல் தான் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்குகிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்த கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் விமலின் தந்தையாக பாண்டியராஜன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா, நேகா நடிக்கின்றனர்.

Anitha Sampath (Bigg Boss) Wiki, Biography, Age, TV Shows, Movies, Images -  News Bugz

இந்த நிலையில் இப்படத்தில் விமலுக்கு சகோதரியாக செய்தி வாசிப்பாளராக இருந்த நடிகையான அனிதா நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்ய போராடும் அண்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை அனிதா சம்பத் படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் இந்த படம் முழுக்க வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவரின் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றார்கள்.

-விளம்பரம்-
Advertisement