கணவரை விவாகரத்து செய்வதாக வந்த செய்தி – அனிதா சம்பத் கொடுத்த பதிலடி.

0
3237
anitha
- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-

இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

இதையும் பாருங்க : சூரரை போற்று படத்தை இந்தியில் ரீ – மேக் செய்யும் சூர்யா. ஹீரோ அவர் இல்லையாம். யார் தெரியுமா ?

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத். அதே போல தனது கணவர் பெயரை சொன்னதால் ‘என் புருஷன் பேர சொல்லாதீங்க ஆரி’ என்று உதட்டை கடித்து எச்சரித்தார் அனிதா. அந்த அளவிற்கு தனது கணவர் மீது மிகுந்து அன்பு கொண்டவர் அனிதா. இப்படி ஒரு நிலையில் அனிதா தனது கணவரை விவாகரத்து செய்ததாக வதந்திகள் பரவியுள்ளது.

சமீபத்தில் முகநூல் பக்கம் ஒன்றில் அனிதா தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா ? உண்மை இது தான் என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியானது. இதுகுறித்து பதில் அளித்துள்ள அனிதா, கண்டன்ட் இல்லனு இந்த அளவிற்கு இறங்கிட்டாங்க கிசுகிசு பக்கங்கள். தினமும் யூடுயூப்;ல வீடியோ போட்றத எல்லாம் அட்மின் பாக்கறதில்ல போல என்று என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement