BB ஜோடிகள் கேரவன் டூர் போட்ட அனிதா – பாத் ரூம் டூர் போட சொன்னவருக்கு சொன்ன பதில்.

0
1753
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர்.

-விளம்பரம்-

இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார். அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். மேலும், சொந்தமாக யூடுயூப் சேனலை நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் இவரிடம் பாத் ரூம் டூர் வீடியோவை போட சொல்லி கேட்டார்.

அதற்கு அனிதா சம்பத், ஒரு பக்கேட் ஒரு மக் மட்டும் தான் இருக்கு என்று வேடிக்கையாக கூறியுள்ளார். சமீபத்தில் இவர் தனது வீட்டு பாத்ரூம் டூர் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அந்த வீடியோ 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடுயூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தது. இருப்பினும் இந்த வீடியோ பல சோலோ யூடுயூப் கிரியேட்டர்களை காண்டாகியதால் கொஞ்சம் நாட்களாக அர்ச்சனாவை பல யூடுயூபர்கள் கேலி செய்தனர்.

-விளம்பரம்-
Advertisement