சுச்சி லீக்ஸ் போன்று அனிதா லீக்ஸ் – வெளியான அனிதா-ரவீந்தரனின் போன் கால் ஆடியோ. ஆரி மேல ஏன் இவ்ளோ காண்டு.

0
26239
anitha
- Advertisement -

சமீபத்தில் பாலாஜி தனக்கு கொடுக்கப்பட்ட விருதை திருப்பி அளித்து இருந்தார். விருது மேடையில் reviewer களை பற்றி பேசியதை யூடுயூபில் ஒளிபரப்பாததால் விருதை திருப்பிக்கொடுப்பதாக அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அனிதா சம்பத், விரைவில் இவர்களின் முகமூடி கழல போகிறது. மற்ற போட்டியாளர்களை மட்டமா பேச ஆளுக்கு 30 ஆயிரம் குடுத்து பேட்டி எடுத்த மேட்டரும் சீக்கிரம் வெளிய வரும். பெருமையாக இருக்கிறது பாலா என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல நேர்மையாக இருப்பவர்கள் வெளியேறிய பின்னர் பேட்டி கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பற்றி தவறாக பேசவில்லை. அப்படி செய்தவர்கள் 20 ஆயிரம் 30 ஆயிரம் பணத்திற்காக செய்தார்கள்.வயித்தெரிச்சல்ல அவர்கள் விரைவில் வெளியேறி விட்டார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ள நேரடியாக மோத முடியாத கோழை, வெளியே வந்து நினைச்சதை பேசுவாங்க.

- Advertisement -

அவங்களுக்கு பிடிக்காதவங்க சீக்கிரம் எலிமினேட் ஆகணும்னு மக்களை உசுப்பேத்தி அவர்களுடைய வாக்க குறைக்க பாப்பாங்க. இது எல்லாத்தையும் தாண்டி நான் 85 நாள் உள்ளே இருந்தேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பாலாஜி சொன்னதும் அனிதா சொன்னதும் behindwoods யூடுயூப் பக்கத்தில் பிக் பாஸ் review செய்த ரவீந்திரன் தான் என்றும் பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு ரவீந்தரனும் பதிலடி கொடுத்தார்.

அதில் அனிதா நீ சிம்ப்ளி வேஸ்ட், தவறான செய்தியை எப்போதுமே சொல்லக்கூடாது. சுரேஷ் மற்றும் வேல்முருகன் பணத்தை வாங்கிக் கொண்டு மற்றவர்களை தவறாக பேசியதாக நீங்கள் தவறான கருத்தை சொல்லக்கூடாது. இதுபோல ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வது கேவலமாக இருக்கிறது.மேலும் நீங்கள் 85 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்தேன் என்று பெருமையாக சொன்னீர்கள். ஆனால்,உண்மையில் நீங்கள் இருந்த போது உங்களை விட மற்றவர்களை வெளியில் அனுப்ப மக்கள் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டார்கள்.

-விளம்பரம்-

எப்போது நீங்க ஆரியை பார்த்து பேசாதீங்க ஆரி என்று சொன்னீர்களே அன்றே ரசிகர்கள் உங்களுக்கு சாரி சொல்லி வெளியில் அனுப்பி விட்டார்கள். இன்னமும் ஆரியின் வெற்றியை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் ரவீந்தரனுடன் போனில் ஆரியின் வெற்றி பற்றி பேசிய ஆடியோக்களை ரெக்கார்ட் செய்து வெளியிட்டுள்ளார்.

Advertisement