அனிதாவிற்கு பதிலடி கொடுத்த ரவீந்திரன் – அடுத்த வனிதாவாக மாறிய அனிதா.

0
1412
anitha
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்திரனை சினிமா ரசிகர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ பிக் பாஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்திரன், நலனும் நந்தினியும், நட்புன்னா என்ன தெரியுமா போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார். ஆனால், இவர் பிரபலமானது என்னவோ வனிதா – பீட்டர் பவுலின் திருமண விவகாரத்தில் தான். அதே போல இவர் அதற்கு முன்பாகவே பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போது யூடுயூப் சேனல் ஒன்றில் பிக் பாஸ் பற்றியும், அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதே போல் தான் சமீபத்தில் நிறைவடைந்த சீசன் 4 பற்றியும் ரிவியூ செய்து வந்தார் ரவீந்திரன்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-102-1024x906.jpg

ஆனால், இந்த சீஸனில் பங்கேற்ற எந்த போட்டியாளருக்கும் ரவீந்திரனுக்கும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக தான் சென்று கொண்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்துக்கும் இவருக்கும் ஒரு புதிய பிரச்சனையின் தீப்பொறி லேசாக சமூக வலைதளத்தில் கிளம்பியுள்ளது. சமீபத்தில் அனிதா யூடுயூப் சேனலில் வெளியிட்ட வீடீயோவை சில யூடுயூ சேனல்கள் வேறு விதத்தில் தலைப்பை போட்டு இருக்கிறார்கள் என்று கடுப்பாகி தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட அனிதா சம்பத், யூடுயூப் ரெவியூன்ற பேர்ல நம்மள நெகடிவ்வா பேசி பேசி மக்கள் கிட்ட வெறுப்பை உண்டாக்கி சம்பாதிக்க வேண்டியது.

- Advertisement -

பிக் பாஸ் முடிஞ்சி வந்ததும் நம்மக்கிட்டயே இன்டர்வியூ கேட்டு கெஞ்ச வேண்டியது. யூடுயூப் ரெவியூக்கு பின்னால் இருக்கும் பண நோக்கம் பற்றி மக்கள் உணர வேண்டும்.சில யூடுயூப் ரெவியூவர் ஹீரோ,ஹீரோயின போல கொண்டாடுகிறார்கள். நாங்கள் புகழ் மற்றும் பணத்திற்காக தான் பிக் பாஸுக்கு போனோம் என்று சொல்கிறார்கள். அப்போ நீங்க மட்டும் சோசியல் சர்விஸ்காகவா ரெவியூ பண்ணிங்க. நீங்க மட்டும் பிரபலத்துக்கும், காசுக்காக தான பண்ணீங்க. எங்களை விட அவங்க தான் அதிக பணத்தை சம்பாதிச்சாங்க. ஒரு ரெவியூ வீடியோக்கே லட்ச லட்சமா யூடுயூப் சேனல்கள் சம்பாதிக்கறாங்க என்று பதிவிட்டிருந்தார் அனிதா.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்தின் இந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவீந்திரன், நம்ம சும்மா போனாலும் இப்படி தான் நடக்குது. ப்ப்பா, அனிதாகா நம்மளைத்தான் பேசுறாப்பல, பாவம் indiaglitz நகு பதில் போய் சிகிட்டாப்ல. behindwoods நீங்க எனக்கு லட்ச லட்சமா குடுத்ததுயெல்லாம் லட்சியமே இல்லாம செலவு பண்ணிட்டேன். முடிஞ்சி போன ஒரு ப்ரோக்கிராம். மறுபடியும் சும்மா வம்பு இழுக்கிறது தப்பு மை லார்ட். நம்மள உரசுனா அப்புறம் யூடுயூப் பூரா நம்ம மேட்ச் மட்டும் தான். நீங்க லிஸ்ட்லயே இல்லை. எனக்கு யாரையும் இன்டர்வியூ பண்ண இன்ட்ரெஸ்ட் இல்ல என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement