பல பிரச்சனைகள் இருந்தாலும் பிக் பாஸ் வரலாற்றிலேயே அனிதா செய்த புதிய சாதனை. என்ன தெரியுமா ?

0
3315
- Advertisement -

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான் என்று சொன்னால் அதற்கு ஈடில்லை. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து.விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத். அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
anitha

மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.பிக்பாஸில் அனிதாவை பார்த்த பலரும் அட இவங்க மிகவும் ஸ்வீட்டான பொண்ணுங்க என்று நினைத்தார்கள். ஆனால் வந்த ஓரிரு நாட்களிலேயே சுரேஷுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அனிதா சம்பத் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் அடைய வைத்தார். மேலும், சமீப காலமாக இவரது நடவடிக்கைகளால் பலரும் இவரை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இப்படி அனிதா சம்பத் மீது எண்ணற்ற விமர்சனங்கள் இருந்து வந்தாலும் பிக்பாஸ் வரலாற்றிலேயே அனிதா சம்பத் புதிய சாதனை ஒன்றை செய்திருக்கிறார் ஆம் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற எந்த ஒரு பெண் போட்டியாளர்களை விட அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட பெண் போட்டியாளராக அனிதா சம்பத் வந்துள்ளார் இதுவரை பிக்பாஸ் வீட்டில் 11 முறை நாமினேஷன் நடைபெறுகிறது இதில் அனிதா சம்பத் 9 முறை நாமினேஷன் இல் வந்திருக்கிறார்.

BB

அதில் இரண்டு முறை நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார். ஒரு முறை நாமினேஷன் டப்பல் கார்டு டாஸ்கை வென்று அனிதா சம்பத் தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து இருந்தார். அந்த வாரம்சம்யுக்தா வெளியேற்றப்பட்டு இருந்தார். அதேபோல கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அனிதா சம்பத் நாமினேசனில் இருந்தபோது கேப்டன் பதவியை வென்று நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதே போல இந்த வாரமும் அனிதா சம்பத் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement