நீங்கள் நடந்து கொண்டது அப்படி தான் இருந்தது – அனிதாவிற்கு கலர்ஸ் டிவி பிரபலம் அனுப்பிய மெசேஜ்.

0
7451
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-
anitha

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் பெண் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

இதையும் பாருங்க : அப்படி சொல்லிட்டு போயிட்டே இருக்கனும் – தந்தை இறப்பிற்கு பின் பாலாஜி பதிவிட்ட முதல் பதிவு.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்திற்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் நடித்து வரும் சீரியல் நடிகை ஒருவர் அனுப்பிய மெசேஜ்ஜை அனிதா சமபத் பகிர்ந்துள்ளார். அதில்உங்களுக்காகத்தான் பிக்பாஸ் பார்த்தேன் என்றும் நீங்கள் பேசியது ரியாக்ட் செய்வது அனைத்தும் சாதாரணமாகத்தான் இருந்தது ஒரு சாதாரண பெண் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படித்தான் நான் உங்களை பார்த்தேன் எப்போதும் மாறி விடாதீர்கள் என்னுடைய திருப்திக்காக தான் இதை அனுப்பி இருக்கிறேன் வேறொன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார் அந்த கலர்ஸ் தொலைக்காட்சி நடிகை.

-விளம்பரம்-
Advertisement