கர்ப்பமாக இருக்கிறாரா அனிதா ? – கணவரோடு சேர்ந்து அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவை பாருங்க

0
507
anitha
- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-

இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத். அதே போல தனது கணவர் பெயரை சொன்னதால் ‘என் புருஷன் பேர சொல்லாதீங்க ஆரி’ என்று உதட்டை கடித்து எச்சரித்தார் அனிதா. அந்த அளவிற்கு தனது கணவர் மீது மிகுந்து அன்பு கொண்டவர் அனிதா. இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அணித சம்பத் ‘அது வெறும் பொழுதுபோக்கிற்காக செய்த வீடியோ அதற்குள் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று பலரும் வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement