அதெல்லாம் காமிக்கல - ஆரி மற்றும் சனம் பற்றி அனிதா சம்பத் அளித்த பதில்.

By Rajkumar · 4/1/2021

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து அனிதா சம்பத் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்ளுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அந்த வகையில் அனிதா சம்பத்தும் ஒருவர். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தர்பார், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு முன்பாக இவருக்கென்று சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் இவருக்கு பல ஆதரவுகள் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவருக்கு ஹேட்டர்ஸ்களும் அதிகமானார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் சண்டை போடாதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இவருக்கு ஆதரவாக பல இடத்தில் இருந்த ஆரி மற்றும் சனம் ஷெட்டியிடம் கூட அனிதா சம்பத் சண்டையிட்டு இருக்கிறார். அதிலும் இவர் வெளியேறிய வாரத்தில் இவர் ஆரியிடம் சண்டையிட்டது தான் இவருக்கு குறைவான வாக்குகள் விழ காரணம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : இரண்டாம் திருமணம் குறித்து கேட்ட ரசிகர் - vj ரம்யா அளித்த பதில் இது தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களில் இவரது தந்தையும் காலமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனிதா சம்பத் தனது ராசிர்கள் அனுப்பி இருந்த சில மெசேஜ்களுக்கு பதில் அளித்து இருந்தார். அந்த வகையில் ரசிகர் ஆரி உங்களிடம் உண்மையாக தான் இருந்தார். பிக் பாஸ் உள்ளே நடந்ததை அணைத்தையும் மறந்து நீங்கள், சனம், ஆரி ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருங்கள் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், ஆமாம், ஆரி மற்றும் சனம் எப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களாக இருப்பார்கள். ஆரியை நான் பின்னால் கிண்டல் செய்தது இல்லை. கோவமோ சண்டையோ நான் நேரா சொல்லிடுவேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் தவறு செய்து இருக்கலாம். நாங்கள் மிகவும் அன்பாகவும் சந்தோசமாகவும் இருந்தோம் ஆனால், எங்களுடைய சண்டை தான் அதிகம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் மூவருக்கும் என்னவகையான உறவு இருந்தது என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் அனிதா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full