இரண்டாம் திருமணம் குறித்து கேட்ட ரசிகர் – vj ரம்யா அளித்த பதில் இது தான்.

0
2046
ramya
- Advertisement -

முன்னணி சேனல்களில் ஒன்றான ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு?’. இந்த நிகழ்ச்சியை ரம்யா சுப்ரமண்யன் தொகுத்து வழங்கினார். இது தான் ரம்யா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியாம். இதனைத் தொடர்ந்து ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்’ என அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ரம்யா சுப்ரமண்யன். இந்த மூன்று நிகழ்ச்சிகளுமே ஒளிபரப்பானது ‘விஜய் டிவி’-யில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
ramya

சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் வாய்ப்பும் ரம்யா சுப்ரமண்யனுக்கு வந்தது. ‘மொழி, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ரம்யா. அதன் பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்தார் ரம்யா. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அபர்ஜித் ஜெயராமன் என்பவரை ரம்யா திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஒரு நைட்க்கு எவ்ளோ – மோசமாக கேட்ட நபருக்கு நீலிமா அளித்த செருப்படி பதில்.

- Advertisement -

அதன் பிறகு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் ரம்யா. ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்கு பிறகு ‘கேம் ஓவர், ஆடை’ போன்ற சில படங்களில் ரம்யா நடித்திருந்தார். இன்று வரை பலரும், ரம்யா நடிக்க சென்று விட்டதால் தான் அவரது திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டது என்று கூறிய வண்ணமுள்ளனர்.பலர் ‘ஓ காதல் கண்மணி’ படம் தான் எனது விவாகரத்துக்கு வழி வகுத்து கொடுத்ததாக கூறி வருகின்றனர். ஆனால், உண்மையான காரணம் அது அல்ல. எங்களது காதல் கல்யாணம் கிடையாது. வீட்டில் பார்த்து பேசி தான் திருமணம் செய்து கொண்டோம்.

ஆனால், அவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு 10 நாட்களிலையே, எங்களது திருமண வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை நாங்கள் இருவருமே உணர்ந்தோம். ஆகையால், உடனே நான் எனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர்,

-விளம்பரம்-
Advertisement